×

எம்.ஜி.ஆர் பேரனின் கங்கை கொண்டான்

ஜே.ஆர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, எம்.ஜி.ஆர் பேரன் ஜூனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கங்கை கொண்டான்’. இப்படத்தின் தொடக்க விழா ராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடந்தது. ஜூனியர் எம்.ஜி.ஆரின் தாயார் லதா, ‘அரசி’ பட தயாரிப்பாளர் வரலட்சுமி பங்கேற்றனர். முக்கிய வேடங்களில் வேல.ராமமூர்த்தி, செந்தில், சீதா, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் ஆகியோருடன் ஹீரோயின்களாக சைத்யா, நிமிஷா நடிக்கின்றனர்.
எஸ்.கே.உதயன் எழுதி இயக்குகிறார். இ.சி.பாஸ்கல் ஜீவராஜ் தயாரிக்கிறார். தற்போது கீரா இயக்கத்தில் ஜூனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்துள்ள ‘இரும்பன்’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Tags : Ganga Kondan ,MGR Baran ,
× RELATED நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53...